லலிதாம்பிகை கோவிலில் அபிராமி அந்தாதி புத்தக வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2022 10:03
பெ.நா.பாளையம்: பெரியதடாகம் லலிதாம்பிகை அம்மன் கோவிலில் அனுதினமும் அந்தாதி புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி எழுதிய அனுதினமும் அந்தாதி, அபிராமி அந்தாதி விளக்கவுரை வெளியீட்டுவிழா நடந்தது. இது தொடர்பான மியூசிக்கல் பென்டிரைவை கோவை வாராஹி மந்திராலயம் வராகி மணிகண்ட சுவாமிகள் வெளியிட்டார். அய்யனார் ஆதீனம் சீனிவாச சுவாமிகள் பெற்றுக்கொண்டார். லலிதாம்பிகை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லீலாவதி சம்பத்குமார் புத்தகத்தை வெளியிட, கற்பகம் பெற்றுக்கொண்டார். புத்தகம் குறித்த கருத்துக்களை அவினாசிலிங்கம் பல்கலை இந்தி மற்றும் சமஸ்கிருத துறை பேராசிரியர் சாந்தி விளக்கினார். நிகழ்ச்சியில், சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி ஏற்புரை வழங்கினார். விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.