Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கோதண்டராமர் கோயில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் அலை மோதிய பக்தர்கள் காளஹஸ்தி சிவன் கோயிலில் அலை மோதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவம்
எழுத்தின் அளவு:
முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவம்

பதிவு செய்த நாள்

15 மார்
2022
11:03

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி, வண்டி மாகாளி உற்சவ விழா சக்தி கோஷத்துடன் ஆரவாரமாக நடந்தது.

இக்கோயிலில் பங்குனி விழா மார்ச் 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். நேற்று காலை 11:00 மணிக்கு அம்மன் எட்டு கரங்களுடன் காளி அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து சிறுவர்-சிறுமியர் முருகன், விநாயகர், அம்மன், குறவன், குறத்தி உள்ளிட்ட வேடங்களில் வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் சக்தி கோஷம் முழங்க ஆரவாரத்துடன் சுவாமி சின்னக்கடை வீதி மண்டகப்படி அடைந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு இரட்டை காளை மாடுகள் பூட்டிய வண்டியில் பெண் வேடமிட்ட ஆண்கள் ஆடி வந்தனர். மேலும் வண்டியின் மேல் பகுதியில் மாகாளி வேடமிட்டவருடன் அம்மன் கோயிலைச் சுற்றி வலம் வந்தது. பின்னர் சின்னக்கடை வீதியில் இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு முத்தாலம்மன் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை வன்னியகுல சத்திரிய மகா சபையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar