கருமாத்தூர் கோயில்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2022 12:03
உசிலம்பட்டி: கருமாத்தூர் கலியுக சிதம்பர ஈஸ்வரர், பொன்னாங்கன், பேச்சி விரும்மன் கோயில்களில் நிர்வாகப் பிரச்சினை காரணமாக ஆண்டு தோறும் மகாசிவராத்திரி திருவிழாவிற்கு வசூலாகும் உண்டியல் காணிக்கைகளை தங்கள் பொறுப்பில் வைத்துள்ளனர். நேற்று காணிக்கைகளை எண்ணும் பணி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கை தொகையை அந்தந்த கோயில் பெயர்களில் பாங்கில் செலுத்தப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.