சோழவந்தான்: சோழவந்தான் அருகே கொடிமங்கலம் நாகதீர்த்தம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி யாகசாலையில் புனித தீர்த்தக்குடங்களை வைத்து பூஜைகள் செய்தனர். சுவாமி, அம்மனுக்கு 11வகையான சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை பூஜாரி குகநாதன் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் தமிழரசன் செய்திருந்தார்.