பழநி கிரிவலப்பாதையின் துாரம் 2 கி.மீ., பாதையில் கான்கிரீட் ரோடு போடப்பட்டுள்ளது. பஞ்சமுக விநாயகர், மதுரை வீரன், சன்னியாசியப்பன், அழகு நாச்சியப்பன் கோயில்களும், நாதஸ்வர இசைப்பள்ளி, மாணவர் இல்லம், சண்முக விலாசம், நந்தனார் விடுதியும் இப்பாதையில் உள்ளன. மலை சுற்றுவோர் வேகமாக நடப்பது கூடாது. செருப்பு அணியாமல் இருப்பது நல்லது. பகலில் வெயிலடிக்கும் என்பதால் காலை, மாலை நேரத்தில் பக்தர்கள் சுற்றுகின்றனர். பவுர்ணமியன்று வலம் வந்தால் நோய் தீரும். உடலும், உள்ளமும் பலம் பெறும்.