முருகன் சன்னதி கிழக்கு நோக்கி இருக்கும். ஆனால், பழநி முருகன் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. மேற்கு நோக்கிய கோயில்களுக்கு சக்தி அதிகம் என்பர். கருவறை மீது தங்க விமானம் உள்ளது. இது தவிர ராஜகோபுரம், 42 துாண்கள் கொண்ட பாரவேல் மண்டபம் இங்குள்ளன. 42 இன் கூட்டுத்தொகை 6. இது சுக்கிரனுக்குரியது. பாரவேல் மண்டபத்தில் நின்று, வெள்ளிக்கிழமை முருகனை வழிபடுவோருக்கு சுக்கிர தோஷம் நீங்கி செல்வம் சேரும்.