இந்தியாவின் மலைக்கோயில்களில் முதன் முதலாக இழுவை ரயில் ஓடியது பழநியில் தான். 1966ல் காமராஜர் ஆட்சியின் போது அமைச்சரவையில் இருந்த பக்தவச்சலம் இப்பாதை உருவாக காரணமாக இருந்தார். 1981ல் மற்றொரு இழுவை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதில் பயணித்தால் எட்டு நிமிடத்தில் மலையேறி விடலாம். அதிகாலை 5:00 மணிக்கு துவங்கும் சேவை இரவு 9:00 மணிக்கு முடியும். விழாக்காலத்தில் நேரம் மாறுபடும்.