சட்டிச்சாமி என்ற துறவி பிச்சை எடுத்த பணத்தில் பழநி மலை அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கை குளத்தைச் சீரமைத்தார். இக்குளத்தில் கற்கள் நிறைந்து கிடந்ததால் கல் கிணறு என்றே பெயர் இருந்தது. சீரமைத்த பின் மக்கள் நீராடும் பொய்கையாக உருவெடுத்தது. வையாபுரி குளம், சண்முகா நதி ஆகிய தீர்த்தங்களும் இங்குள்ளன.