முதல் கை- தேவர், முனிவர்களைப் பாதுகாக்கிறது. இரண்டாம் கை- முதல் கை செய்யும் பணிக்கு உதவி செய்கிறது. மூன்றாம் கை- உலகத்தை தன் கைக்குள் அடக்குவதற்காக அங்குசத்தை செலுத்துகின்றது. நான்காம் கை- ஆடை உடுத்திய தொடையில் உள்ளது. ஐந்தாம் கை- நிறைந்த அருளைத் தருகிறது. ஆறாம் கை- வேல் கொண்டு பக்தர்களைப் காக்கிறது. ஏழாம் கை- சரவணபவ என்னும் மந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் மார்பில் உள்ளது. எட்டாம் கை- மார்பில் இருந்து தொங்கும் மாலையைத் தாங்குகிறது. ஒன்பதாம் கை- முனிவர்களின் யாகபலனை ஏற்கிறது. பத்தாம் கை- இதுவும் யாகபலனையே ஏற்கிறது. 11ம் கை- நாடு செழிக்க மழை தருகிறது. 12ம் கை- வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.