Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனின் 12 கைகளும் என்ன செய்கின்றன? காணிக்கை தர வழியில்லையே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆறுமுகனின் அடியவர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2022
12:03


முருகனின் அருள்பெற்ற அருளாளர்கள் அகத்தியர், அருணகிரிநாதர் என்று எண்ணிக்கையில் அடங்காது. அவர்களே நமக்கு குருவாக இருந்து குருவருள், முருகனின் திருவருளை தந்தருள்கின்றனர்.
அகத்தியர்
முருகன் அருள்பெற்ற அடியார்களின் முதன்மையானவர் அகத்தியர். செந்தமிழ்நாடான இப்பகுதியை அகத்தியமுனிவரே முருகனிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்ற இவர் அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதினார்.
நக்கீரர்
சங்கப்புலவராக மதுரை நகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர். முருகன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக் குகையில் கிடந்த போது, முருகனே காப்பாற்றி அருள்புரிந்தார். முருகனின் ஆறுபடைவீடுகளையும் சிறப்பித்து போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.
அவ்வையார்
முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகன் இவரிடம், “பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஞானத்தை அருளினார். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.
குமரகுருபரர்
திருச்செந்துார் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயது வரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முருகனின் மீது இவர் பாடிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் புகழ்பெற்றதாகும். காசியில் மடம் ஒன்றை நிறுவி தெய்வத் தொண்டில் ஈடுபட்டார்.
தேவராய சுவாமிகள்
பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நுாலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராயசுவாமிகள். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நுால் இது. சென்னிமலை முருகன் மீது பாடப்பட்ட இந்நுால், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.
ராமலிங்க வள்ளலார்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றியவர் வள்ளலார். சிறுவனாக இருக்கும் போது கண்ணாடியின் முன் தியானம் செய்யும்போது மயில் வாகனத்தில் முருகன் இவருக்கு காட்சியளித்தார் என்பர். கந்த கோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தவேளிடம் இவர் கேட்கும் வரங்கள் நம் அனைவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.
பாம்பன் சுவாமிகள்
யாழ்பாணத்தில் அவதரித்த இவரை குமரகுருதாச சுவாமிகள் என்றும் அழைப்பர். ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பனில் வாழ்ந்ததால், பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். முருகனின் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நுாலாகத் திகழ்கிறது. உயிர், மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாகக் கொண்டு அமைந்த நுால் இது. பஞ்சாமிர்த வண்ணம் என்னும் பாடலால் முருகனுக்கு அபிஷேகம் செய்தவர் இவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar