சித்தூர் : ஆந்திர மாநிலம், சித்தூர், காளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு அமெரிக்காவை சேர்ந்த சுவாதி ரெட்டி குடும்பத்தினர் இன்று ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜுவிடம் ரூ 4,80,803 மதிப்புள்ள (அம்மனுக்கு அலங்கரிக்கப்படும் )வெள்ளி நகைகளை காணிக்கையாக வழங்கினர். இவர்களுடன் காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக.சீனிவாசுலு இருந்தனர்.