Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் ... காளஹஸ்தி கோயிலில் தாயாருக்கு வெள்ளி நகை காணிக்கை காளஹஸ்தி கோயிலில் தாயாருக்கு வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திர விழா: கும்பகோணம் கோவில்களில் தீர்த்தவாரி, தெப்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திர விழா: கும்பகோணம் கோவில்களில் தீர்த்தவாரி, தெப்பம்

பதிவு செய்த நாள்

18 மார்
2022
06:03

தஞ்சாவூர், கும்பகோணம் மகாமகம் குளத்திலும், காவிரி ஆற்றிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 5 கோவில்களில்  தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி, ஆதிகம்பட்ட விஸ்வநாத சுவாமி, கொட்டையூர் கோடீஸ்வரர், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில்களில் கடந்த 9ம் தேதி கொடியேற்றப்பட்டு, பங்குனி உத்திர பிரம்மோத்சவ விழா 10 நாட்கள் நடந்தது. தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. விழாவின் 10வது நாளான  பெரியநாயகியம்மன் சமேத நாகேஸ்வரர் சுவாமி, அனந்தநிதியம்பிகையம்மன் சமேத கம்பட்டவிஸ்வநாதர் சுவாமியும் தனித்தனி வாகனங்களிலும் வீதியுலா சென்றனர். பின்னர் பகல் 12 மணியளவில் மகாமகம் குளக்கரையில்  தீர்த்தவாரி மூர்த்தியான அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்களும் மகாமக குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.

இதே போல் கொட்டையூரில் உள்ள பந்தாடுநாயகியம்மன் சமேத கோடீஸ்வரர் கோவில், திருபுவனத்திலுள்ள தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவிலின்  தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெற்றது. இதே போல் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏகதின விழா நடைபெற்றது. காலையில் தங்கமயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி வீதியுலா சென்று, காவிரியாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஏராளமானோர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar