Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி கோயிலில் தாயாருக்கு வெள்ளி ... காலாப்பட்டு பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர செடல் திருவிழா காலாப்பட்டு பாலமுருகன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசவளநாடு கோவிலூரில் பங்குனி உத்திர பெருவிழா: பால்குடம் எடுத்து நேர்த்தி கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காசவளநாடு கோவிலூரில் பங்குனி உத்திர பெருவிழா: பால்குடம் எடுத்து நேர்த்தி கடன்

பதிவு செய்த நாள்

18 மார்
2022
07:03

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் திருக்கோவிலில்  பங்குனி உத்திர பெருவிழாவில், 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாட்டில் 18 கிராமங்கள் உள்ளடங்கியுள்ளது. இந்த கிராமங்களுக்கு ஆன்மிக தலமாக விளங்குவது கோவிலூர். அதன்படி கோவிலூர் கிராமத்தில் ஜெம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி பத்துநாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பிரமோத்சவ விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலை - மாலை சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான பங்குனி உத்திர விழாவான நேற்று மூலவர் ஜெம்புகேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. மேலும், தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் இடும்பன், முருகன் சன்னதியில் ஏராளமானோர் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து  காலை முதல் மாலை வரை   காசவளநாட்டில் உள்ளடங்கிய 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பங்குனி உத்திரவிழாவினைத் தொடர்ந்து கோவிலூரில் பல்வேறு கிராமத்தினரும், அன்னதானம், நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாஸ்து நாளில் புதிய வீடு கட்டத் தொடங்குவது, மனை வாங்குவது, மற்றும் கட்டடப் பணிகள் மேற்கொள்வது மிகவும் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று கிருத்திகை விழாவை ஒட்டி, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் இன்று இரவு நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
அயோத்தி: மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar