மதுரை: யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயில் தெப்பக்குளத்திற்கு எதிரில் நவ நரசிம்மர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் நேற்று (18 ம் தேதி) பங்குனி உத்திரத்தில், காலை 9.35 .மணி – 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நரசிம்மர், அமிர்தவல்லி தாயார் அருள்பாலித்தனர். நரசிம்மையா சாரிட்ட பிள் சார்பில் நடைபெற்ற இந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோயிலில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது. திருப்பணிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் 8778034151, 9842024866 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.