கடலாடி: கடலாடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்தில் நாக விநாயகர் சன்னிதியில் ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது.
நேற்று மாலை 4 மணியளவில் வன்னி மரத்தில் உள்ள நாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ராசிக்காரர்கள் சங்கல்ப பூஜையில் பங்கேற்று தனது பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டனர். ஏற்பாடுகளை மகாசபை பிரதோச தனதான கமிட்டியினர் செய்து இருந்தனர்.
திருப்புல்லாணி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள நவகிரகத்திற்கு ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது. பூஜைகளை ஜெகநாத சாஸ்திரி, பாபு சாஸ்திரி, ஹேமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். பரிகார ராசிக்காரர்கள் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டனர். நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.