வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே நகரி பொன்முனியாண்டி, லட்சுமி அம்மன் கோயில் 19ம் ஆண்டு உற்சவ விழா மூன்று நாட்கள் நடந்தது. தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. முளைப்பாரி ஊர்வலம், திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவேந்திரகுல வேளாளர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்தனர்.