தங்கவயல், : ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையிலுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு திருவிழா நடக்கிறது.கர்நாடக அரசின் இந்து அறநிலைத்துறைக்கு உட்பட்ட ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் மார்ச் 12 ல் பிரம்மோற்சவம் துவங்கியது.
இதில் முதலியார் சங்கத்தின் புஷ்ப பல்லக்கு நாளை நடக்கிறது.நுாற்றாண்டை கடந்து பிரசித்தி பெற்ற இக்கோவிலின் 87ம் ஆண்டு பிரம்மோற்சவத்தில் புஷ்ப பல்லக்கு முத்தாய்ப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. காலையில் அபிஷேகம், அலங்காரம், மகா மங்களார்த்தி, பிரசாத வினியோகம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், பக்திசை கச்சேரி, கதா காலட்சேபம் நடக்கிறது.இரவு 10:00 மணிக்கு மேல் 50 டன் பூக்களால் பல்லக்கு அமைத்து சுவாமியை நகர் வலம் கொண்டு வரப்படுகிறது.புஷ்ப பல்லக்கு திருவிழாவை காண பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். திருவிழாவுக்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.