பதிவு செய்த நாள்
18
ஜூலை
2012
11:07
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி, ஸ்ரீ வீரதீர ஆஞ்சநேயர் கோவிலில், ஆடி அமாவாசை சிறப்பு பூஜை இன்று (ஜூலை 18) நடக்கிறது. இதையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சந்தன காப்பு, வடை மாலை சாத்துதல் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
* காரிமங்கலம் அடுத்த ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் மலைக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
* காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், தர்மபுரி வெளிப்பேட்டை அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில் ஆகியவற்றில் ஆடி அமாவாசையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் திருவீதி உலா, ஜாமபூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
* எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் கோவில், கீழ்தெரு தாச ஆஞ்சநேயர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளி கவசம் சாத்துதல், வடை மாலை சாத்துதல் ஆகியவை நடக்கிறது.