பதிவு செய்த நாள்
18
ஜூலை
2012
11:07
திருநெல்வேலி:திம்மராஜபுரம் பேச்சியம்மன் கோயிலில் நாளை (20ம் தேதி) கொடை விழா நடக்கிறது.பாளை. திம்மராஜபுரத்தில் பேச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவபெருமான், பேச்சியம்மன், சுடலைமாடன், தடிவீரன், தளவாய் மாடன், மாயாண்டி மற்றும் பரிவார தேவதைகள் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோயில் கொடை விழா கடந்த 13ம் தேதி கால்நாட்டு வைபத்துடன் துவங்கியது. அன்று முதல் விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இன்று (19ம் தேதி) மாலை 6 மணிக்கு சாந்திநகர் நடுவுடையார் சாஸ்தா கோயிலில் இருந்து 11 தீர்த்த குடங்கள் எடுத்து வரும் குடியழைப்பு நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.கொடை விழாவான நாளை (20ம் தேதி) காலை 8 மணிக்கு பால்குடம் வீதியுலா, 12 மணிக்கு சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாரானை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பொங்கலிடுதல், இரவு 10.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடக்கிறது.27ம் தேதி எட்டாம் பூஜையை முன்னிட்டு இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை திம்மராஜபுரம் பேச்சியம்மன் கோயில் கொடை விழாக் கமிட்டியினர் செய்துள்ளனர்.