திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையிடம் திருமாங்கல்யம் ஆசி பெறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் மதியம் 12:45 மணிக்கு நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்தபின்பு தீபாராதனைகள் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6.00 மணிக்கு துவங்கியது. அரோகர கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.