காரைக்கால்: காரைக்கால் மாஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் 199வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று பகல் இரதம்,பல்லாக்கு ஊர்வலகம் நடந்தது.அதைத் தொடர்ந்து. பின் நேற்று இரவு 9மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா நடந்தது. பின் சாம்பிராணி சட்டி வீதி உலா நடந்தது. இரவு 12.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு வீதி உலா துவங்கியது. அதிகாலை 3.30மணிக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் நாஜிம் எம்.எல்.ஏ.,உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனார்.பல்லாக்கு ரதம் புறப்பாடில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.வரும் 25ம் தேதி கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.