ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ஜெய் மகா காளீஸ்வரி கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு அடிவாரம் இந்திரா நகரில் ஜெகன் மாதா ஸ்ரீ சர்ப்ப சுயம்பு ஸ்ரீ விஷ்ணு ஸ்ரீ ஜெய் மகா காளீஸ்வரி திருக்கோவில் அமைந்துள்ளது. கோயிலின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மங்கல இசை மஞ்சள் விநாயகர் பூஜையுடன் தொடங்கி பல்வேறு யாகசாலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சித்தி விநாயகர் பிரதிஷ்டை தொடர்ந்து குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கோயில் அர்ச்சகர்கள் வெங்கட்ராமன் ஐயர், சீதாராமன், சீனிவாசன், வெங்கட்ராமன் ஆகியோர் பூஜைகள் நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை ஓய்வு நீதிபதி பொன்னுச்சாமி, தர்மகர்த்தா டாக்டர் செந்திலாதிபன் செய்தனர்.