சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பூச்சாட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2022 08:03
அன்னூர்: குன்னத்தூராம்பாளையம், சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.
குன்னத்தூராம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த 15ம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு அணிக்கூடை மற்றும் தீர்த்தக் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சக்தி மாரியம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்களால் ஆராதனை செய்யப்பட்டது. இரவு கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு அம்மன் அழைத்தாலும், இதையடுத்து சக்தி மாரியம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்தலும், முளைப்பாலிகை எடுத்தலும் நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். கோவில் வளாகத்தில் உள்ள முருகன், விநாயகர் சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.