பதிவு செய்த நாள்
24
மார்
2022
08:03
காஞ்சிபுரம் : ஆந்திர மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று இரவு அனந்தபூர் சென்றடைந்தார்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 16ம் தேதி இரவு, காஞ்சிபுரத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு யாத்திரை புறப்பட்டார். கடந்த வாரம், கடப்பாவில் தங்கி, பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கிருந்து தாடி பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம், பிராமண சமிதி பவன் மற்றும் தாடிபத்திரியில் உள்ள மற்ற இடங்களுக்குச் சென்று, இரவு 9:45 மணிக்கு அனந்தபூர் சென்றடைந்தார். அனந்தப்பூர் மக்கள் வரவேற்று, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவருக்கு பக்தர்கள் சார்பில், ஸ்வகதா பத்திரிகை வழங்கப்பட்டது. அங்கு, ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து சமாஜம் எதிர்கொள்ளும் சமூக விஷயங்களைப் பற்றி, பல்வேறு தலைப்புகளில் சுவாமிகள் பேசினார். அங்கு கூடியிருந்த மக்களை தர்ம காரியங்கள் செய்ய ஆசிர்வதித்து, தன் உரையை நிறைவு செய்தார். நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு அபய ஆஞ்சநேய சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீமடம் முகாமிற்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்றார்.