Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி நரசிம்மர் ... திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நாச்சியார் கோலத்தில் சுவாமி உலா திருநீர்மலை ரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 230 வது உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 230 வது உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

24 மார்
2022
03:03

தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு  இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வருகிற 27.03.2022, ஞாயிற்றுக்கிழமை, காலை 7.00 மணி முதல் மாலை 4 மணி வரை திருவள்ளூர், திருப்பாச்சூர், வாசீஸ்வரர் கோயிலில் உழவாரப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறது.  தொடர்ந்து கோயில் வெளி பிரகாரத்தில் பக்தகோடிகளிடையே, திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறை ஈசனை சுமந்து, திருமுறைகள் பாடி, அடியார்கள் புடை சூழமக்களிடையே திருக்கோயில்களின் தூய்மை - நலன் - பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திருவீதிவுலா வருவதுடன், பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தும் வகையில் துணிப்பை வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகளையும் நடுகிறது.
 
தொடர்புக்கு:
எஸ். கணேசன்  9840 123 866
நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்

விழிப்புணர்வின் அவசியங்கள்:
* திருக்கோயில்தோறும் தூய்மையாக வைத்திருத்தல் (உழவாரப்பணி)
* திருக்கோயில்களை நமது இல்லமாக பாவித்து தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
* திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், திருக்கோயில் வளர்ச்சி, வருமானம் மூலமாக, பின்வரும் தேவைகளுக்கு வழி செய்தல்.
* திருக்குளம் பராமரிப்பு - திருக்குளத்தை சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வள ஆதாரத்தை பெருக்குதல்
* திருக்கோயில்களில் சிலை திருட்டை தடுப்பதற்கான வழியை உருவாக்குதல்.
* திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதியுலா செல்ல ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் சுவாமி திருத்தேர் செய்து பவனி வர ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் கோசாலை பாதுகாத்து தொடர்ந்து பராமரித்தல்.
* திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், தங்குமிடம், அன்னதான கூடம், கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு
* திருக்கோயில்தோறும் அப்பகுதிவாழ் சிறார்களுக்கு அறநிலையத்துறை சார்பில் தேவார திருமுறை வகுப்புகள் ஏற்பாடு,
* திருக்கோயில்தோறும் ஆகம விதி பின்பற்றுதல், புராதானம் மாறாமல் காப்பது.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் வலியுணர்த்தும் வகையில் அவர்களாகவே முன்வந்து திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவதே மன்ற அடியார்களின் தலையாய கடமையாகும். விழிப்புணர்வு மூலம் உழவாரப் பணி செய்யும் திருக்கோயில்கள்தோறும் குறைந்தது 50 அடியார் பெருமக்களையாவது அத்திருக்கோயிலில் நிரந்தரமாக தொண்டு செய்வதற்கு உருவாக்குவதே ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar