குருக்ஷேத்திர போரில் அர்ஜுனனால் அம்பு எய்யப்பட்டு, காயங்களுடன் அம்பு படுக்கையில் கிடந்தார் பிதாமகர் பீஷ்மர். அந்த நேரத்தில் கிருஷ்ணர் அவரைக் காண வந்தார். கிருஷ்ணரைக் கண்ட பீஷ்மர் அவரை 1008 பெயர்கள் சொல்லி போற்றினார். கடவுளின் பெயரை ‘திருநாமம்’ என்பர். சகஸ்ரம் என்றால் ‘ஆயிரம்’. இதனால் அவர் சொன்ன 1008 பெயர்களும் ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ என பெயர் பெற்றது.