எத்தனையோ வரன் பார்த்தும் திருமணம் நிச்சயம் ஆகாமல் தள்ளிக் கொண்டே போகிறதே என நீங்கள் கவலைப்படலாம். அதிலிருந்து விடுவிக்க காத்திருக்கிறார் புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்துார் வரதராஜப்பெருமாள். இங்கு தரப்படும் ராமர் – சீதை காப்புக்கயிறை கட்டினால் கெட்டிமேளம் வீட்டில் ஒலிக்கும். 500 ஆண்டுகளுக்கு முந்திய இக்கோயில் இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது. பிருகு முனிவரின் மகளாக அவதரித்த மகாலட்சுமி இத்தலத்தில் வரதராஜப் பெருமாளை திருமணம் புரிந்தாள். கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற கோலத்தில் சுவாமி அருள்புரிகிறார். பெருமாளைக் கைபிடித்த மகிழ்ச்சியில் பெருந்தேவித்தாயார் தனி சன்னதியில் இருக்கிறாள். அவதார காலம் முடிந்து வைகுண்டம் கிளம்பும் முன், ராமர், சீதையுடன் இங்கு தங்கியிருந்தார். அர்த்த மண்டபத்தில் சீதாராமர் சன்னதி உள்ளது. ராமர் முழங்கால், இடுப்பு, கழுத்தை வளைத்தபடி சீதையுடன் ஒயிலாக நிற்கிறார். அருகில் அனுமன் இடக்கையில் சூரியக்கொடி ஏந்தியும், வலக்கையால் வாய் பொத்தியும் இருக்கிறார். இக்கோயிலில் ஏப்.11ல் சீதாராமர் திருக்கல்யாணம் நடக்கிறது. அப்போது பூஜையில் வைக்கப்படும் காப்புக்கயிறுகள் ஏப்.13 அன்று காலை 8:00 – மதியம் 1:00 மணி, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை பக்தர்களுக்கு தருவர். இதைக் கட்டினால் திருமணம் நடக்கும். பெருந்தேவி தாயாருக்கு வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனம், மாலையில் அர்ச்சனையின் போது பங்கேற்பவர்களின் விருப்பம் நிறைவேறும். இங்கு ஆண்டாள் சூடிய மாலையை வீட்டில் வைத்து வழிபட்டாலும், பெருந்தேவிதாயாருக்கு எட்டு வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்தாலும் திருமணம் நடக்கும்.
. கருவறை எதிரில் அஷ்ட நாக ஆபரணம் சூடியபடி கருடாழ்வார் உள்ளார். சுவாதி நட்சத்திரத்தன்று இவரை எட்டு முறை வலம் வந்தால் கல்வி வளர்ச்சி ஏற்படும்.
எப்படி செல்வது புதுச்சேரி – கடலுார் சாலையில் தவளக்குப்பத்தில் இருந்து 7 கி.மீ.,