பதிவு செய்த நாள்
27
மார்
2022
12:03
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா, கடந்த 16 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 22 ந் தேதி பக்தர்கள் குண்டம் பூ இறங்குதல், நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நேற்று நிறைவு பெற்றது. நிறைவு விழாவையொட்டி, காலை 11.00 மணிக்கு கொண்டத்து காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மகாசரிசனத்தில் காட்சியளித்தார். கொடி இறக்கப்பட்டு அம்மன் சப்பரத்தில் வீதி உலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தார். வீதி உலா வின் போது மஞ்சள் நீர் தரிசனம் நடைபெற்றது. நிறைவு விழாவில் நூற்று கணகாகான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தர்சித்தனர்.
30 இடங்களில் மொபைல் டாய்லெட், 7 இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக கானப்படுவதால், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் கானும் வகையில் இரண்டு இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி., டி.வி அமைக்கப்பட்டிருந்தது. அவிநாசி டி.எஸ்.பி. தலைமையில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. போலீசார், ஆயிதபடை, ஊர்காவல்படையினர், என 800 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் செய்திருந்தனர்.