பதிவு செய்த நாள்
27
மார்
2022
12:03
சபரிமலை: சபரிமலை மற்றும் பம்பையில் வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. படிபூஜை கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கட்டண உயர்வு ஏப்., 10–ம் தேதி சித்திரை விஷூவுக்காக நடை திறக்கும் நாள் முதல் அமலுக்கு வருகிறது.
புதிய கட்டண விபரம் வருமாறு: அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம். அப்பம் ஒரு பாக்கெட் 45 (35), அரவணை 100 (80), கணபதிேஹாமம் 375 (300), பகவதி சேவை 2500 (2000), அஷ்டாபிேஷகம் 6000 (5000), களபாபிேஷகம் 38400 ( 22500), பஞ்சாமிர்த அபிேஷகம் 125, புஷ்பாபிேஷகம் 12500 (10000), அபிேஷக நெய் 100 மில்லி 100 (75), துலாபாரம் 625 (500), உஷபூஜை 1500 (1000), உச்சபூஜை 3000(2500). உதயாஸ்மனபூஜை 61800 (50000), உற்சவபலி 37500 (30000), படிபூஜை 1,37,000 (1,15,000), தினபூஜை 4000 (3000), வெள்ளி அங்கி சார்த்துதல் 6250 ( 5000), தங்க அங்கி சார்த்து 15000 (10000), நீராஞ்சனம் 125 (100), சோறு ஊட்டுதல் 300 (250), மஞ்சள்பறை 400 (300), நெல்பறை 200 (200). பம்பை: இருமுடிகட்டுதல் 300 (250), மோதகம் ( ஒரு பாக்கெட் ) 40 (35), வடைமாலை 250 (200).