மதுரை, :காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திராவில் யாத்திரை முடிந்து கர்நாடகா சென்றார்.
காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யாத்திரையாக காஞ்சிபுரத்தில் இருந்து மார்ச் 16 புறப்பட்டார். ஆந்திராவில் பல்வேறு நகரங்களில் தங்கி சந்த்ர மவுலீஸ்வர பூஜை, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அனந்தப்பூரில் உள்ள சத்யநாராயண சுவாமி கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் தங்கி பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் வழங்கினார். எலம்மா கோயிலில் மாதாந்திர அனுஷ நட்சத்திர பூஜைகளை செய்தார்.
பின்னர் கர்நாடக மாநிலம் பெல்லாரிக்கு புறப்பட்டார். பெல்லாரியில் லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கே.ஆர்.எஸ். மகாலில் புரோகிதர் சங்கம் சார்பில் பாத பூஜை நடந்தது. அங்கு ஹிந்து தர்மம் மற்றும் கலாசாரம் குறித்தும், மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கன்னடத்தில் பேசினார். பின்னர் சந்துாரு நகருக்கு சென்ற அவருக்கு கோர்படே அரச குடும்பம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. மார்ச் 30 வரை சந்துாருவில் தங்கியிருக்கும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறுநாள் ெஹாசபேட் செல்கிறார்.