கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஸ்ரீ வடக்குபுற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பு நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். நாளை மார்ச் 29 கோயிலில் உள்ள முளைப்பாரிகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று பூசத்தாய் ஊருணியில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.