ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று பகல் 12:45 மணிக்கு ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஸ்ரீ ரவிசங்கர், காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தார். கோயில் நடை சாத்தியதால், அங்கிருந்து காரில் தனுஷ்கோடிக்கு சென்று கடலில் புனித நீராடினார். பின் மாலை 4:15 மணிக்கு கோயிலுக்கு வந்த ரவிசங்கர், அங்கு வாழும் கலை அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்த 108 சங்கு அபிஷேகம், ருத்ர அபிஷேகத்தில் பங்கேற்று சுவாமி, அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின் மண்டபம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.