சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை, ஆடி மாத பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுக்காக கடந்த 15ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் காலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி அமாவாசையை ஒட்டி, நேற்று முன்தினம் பம்பையில் திரளான பக்தர்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, இன்றிரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. *தொடர்ந்து, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த புதிய நெற்கதிர்களை அய்யப்பனுக்கு படைக்கும் நிறபுத்தரி உற்சவம் அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 6ம் தேதி நடைபெறும். இதற்காக, கோவில் நடை 5ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.