Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ... சபரிமலை நடை அடைப்பு! சபரிமலை நடை அடைப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2012
10:07

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் இரண்டு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். நெரிசல் காரணமாக ஊஞ்சல் உற்சவத்தை விரைவாக முடித்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக் கவசம் அணிவித்தனர். இரவு 11.50 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் பலர் சாமி அருள் வந்து ஆடினர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செஞ்சி தாசில்தார் வாசுதேவன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.
2 லட்சம் பேர் நேற்று முன்தினம் ஆடி அமாவாசை என்பதால் காலை முதல் பக்தர்கள் வரத் துவங்கினர். இரவு 11 மணிக்கு மேல்மலையனூரில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்திருந்தனர். தெருக்களில் கூட்டம் அலைமோதியது. கோவிலின் மேற்கு வாசல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும் வடக்கு வாசல் எதிரிலும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் வழக்கமாக 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை சீக்கிரமாக துவங்க டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டார். இதையேற்று 11.50 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர்.

25 நிமிடத்தில் முடிவு: வழக்கமாக ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தை கூட்ட நெரிசல் காரணமாக 25 நிமிடங்களில் முடித்தனர். உற்சவம் முடிந்து வெளியே செல்லும் போதும் கடும் நெரிசல் ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar