நத்தம் ஊராளிபட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2022 10:04
நத்தம்: நத்தம் அருகே ஊராளிபட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தீவட்டி பரிவாரங்கள் மற்றும் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்த அம்மன் மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு சென்றது. பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று மார்ச் 31 காலையில் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊராளி பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.