சித்தூர் : காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் தேதி.31.03.2022. அமாவாசையையொட்டி வியாழக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஞானபிரசுனாம்பிகை தாயார் அம்பாரி வாகனங்களில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் . முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கோயிலில் இருந்து ராஜகோபுரம் வழியாக தேர் வீதிக்கு வந்ததோடு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அமர்த்தி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 4 மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசுலு கோயில் நிர்வாக அதிகாரி நெத்தி.ராஜு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணரெட்டி, மற்றும் கோயில் அதிகாரிகள் லோகேஷ் ரெட்டி , கோயில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.