கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே ஆதி பரஞ்ஜோதி மடத்தில் அமாவாசை சிறப்பு யாக பூஜை நடந்தது.
இந்த மடத்தில் அம்மாவாசை தினங்களில் சிறப்பு யாக பூஜை மற்றும் கோ பூஜை நடைபெறும். அமாவாசை நாளான நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் மூட்டை மூட்டையாக மிளகாய் வத்தலை கொண்டுவந்தனர். பின் மிளகாய்வற்றல் அனைத்தையும் கொட்டி உலக நன்மை வேண்டி யாக பூஜை செய்தனர். மடத்தில் கோவர்த்தன கோசாலையில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு வகை மாடுகள் பராமரிக்கப்படுகிறது. இவர்களுக்கு பக்தர்கள் உணவு, வழங்கி கோ பூஜை செய்தனர். பூஜைகளை மடத்தின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாசியார் செய்தார். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.