அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே கோவிலுரர் உச்சிமாகாளியம்மன் கோயில் உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக இவ்விழாவிற்கான உத்தரவு கேட்கும் வழிபாடு ஆயிரம் ஆண்டு பழமையான ஆதிநாராயண பெருமாள், கம்பத்தடியான் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. சுவாமிக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பூசணி உள்ளிட்ட உணவை படையல் வைத்த பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏப்.,12 அம்மன் புறப்பாடும், ஏப்.,13ல் பக்தர்கள் பால்குடம் எடுக்கின்றனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்கின்றனர்.