ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2022 08:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தேரோட்டம் வெகு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 11:30 மணிக்கு திருத்தேருக்கு பெரியமாரியம்மன் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மதியம் 12:20 மணிக்கு திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் வீதிகள் சுற்றி வந்து தேர் நிலையம் அடைந்தது. ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டும், மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் முத்துராஜா, செயல் அலுவலர் கலாராணி, அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. சபரிநாதன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக பூக்குழி திருவிழா வழக்கமான முறையில் நடக்காத நிலையில், இந்த ஆண்டு எவ்வித தடையுமின்றி, இடையூறுமின்றி பூக்குழி திருவிழா சிறப்பாக நடந்து முடிந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.