திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி பண்டிகை கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2022 07:04
திருப்பதி: திருமலை கோயிலில் யுகாதி பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. பண்டிகையை முன்னிட்டு கோயில் மலர், மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். யுகத்தின் தொடக்கம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் இவ்வாறு அழைக்கப்படுது. சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த உலகத்தை படைத்ததாக பிரம்மபுராணத்தில் கூறப்படுது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. நேற்று யுகாதி மாதப்பிறப்பை முன்னிட்டு திருமலை திருப்பதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உகாதி ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட்டது. காலையில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் மற்றும் சேனாதிபதியாக திகழும் விஸ்வகேசவர் ஆகியோர் தங்க வாசலில் எழுந்தருளினர். இவர்களின் முன்பாக பிலவ நாம வருடத்திற்கான புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் உகாதி பச்சடி அங்குள்ள பக்தர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. மூலவருக்கு புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு வைர அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. உகாதி திருநாளுக்கு உரித்தான ‘ரூபாய் ஆரத்தி’ சுவாமிக்கு கொடுக்கப்பட்டது.