Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023 .. ... கன்னி : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023 .. நல்லகாலம் பொறந்தாச்சு கன்னி : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023 .. ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை)
சிம்மம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. திடீர் பணவரவு
எழுத்தின் அளவு:
சிம்மம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. திடீர் பணவரவு

பதிவு செய்த நாள்

03 ஏப்
2022
02:04

மகம்: திடீர் பணவரவு

ஆன்மாவிற்கும், கவுரவத்திற்கும் காரகனான சூரியனை ராசிநாதனாகவும், ஞானத்திற்கும் மோட்சத்திற்கும். காரகனான கேதுவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் பல்வேறு பாதைகளைக் கடந்து வந்திருப்பீர்கள். எந்த நிலையிலும் துணிந்து நிற்கும் ஆற்றலும், விடா முயற்சியால் நினைத்ததை அடையும் சக்தியும் கொண்ட உங்களுக்கு, 7ம் இடத்தில் சஞ்சரித்து ஏற்றமான பலன்களை வழங்கி வந்த குரு, 2022 ஏப்.13 அன்று உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான மீனத்திற்கு செல்கிறார். இதுவரையில் நீங்கள் அடைந்து வந்த முன்னேற்றத்தில் தடைகளை உண்டாக்குவார். உங்கள் ராசி நாதனுக்கு குரு அஷ்டமாதிபதி என்பதால் அவர் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்  பாதகம் ஏற்டாது. பொதுவாக குரு பகவான் அமரும் இடங்களுக்குப் பலன் வழங்குவதில்லை. அவர் பார்க்கும் இடங்களுக்கே பலன் அதிகம். ஓய்வின்றி செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீடு, நிலம் வாங்குவதற்காக
செலவு செய்வீர்கள். ஒரு பக்கம் அலைச்சல் என்றிருந்தாலும் மறுபக்கம் சந்தோஷமும் உண்டாகும். 3 ல் சஞ்சரிக்கும் கேதுவால் தைரியம் கூடும். 6ல் சஞ்சரிக்கும் சனி உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்துவதால் வழக்கமான உங்கள் செயல்பாட்டில் தடையேதும் உண்டாகாது.

நிதி: பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு திடீர் வரவுகளை உண்டாக்குவார். தன ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் வருமானம் அதிகரிக்கும். நிலுவை பணம் உங்கள் கைக்கு வரும். சேமிப்பு உயரும்.  எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஸ்திர சொத்து வாங்குவதற்காகவும் குடும்ப நலனுக்காகவும் இருப்பு கரையும். சிலர் கடன் வாங்கியாவது நினைத்ததை நிறைவேற்றுவர். மூன்றில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதன் கேது  சுறுசுறுப்பாக்குவார். தர்ம சிந்தனையை மேலோங்கச் செய்வார்.

குடும்பம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தின் மீதான குருபகவானின் பார்வை  நிம்மதியை உண்டாக்கும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பிள்ளைகளின் நலன் குறித்த சிந்தனை மேலோங்கும். அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சுகஸ்தானமான 4ம் வீட்டிற்கு குருவின் பார்வை உண்டாவதால் சுற்றுலா அல்லது ஆலய தரிசனம் செய்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

கல்வி: கல்வியின் மீதான அக்கறை குறையும். வீண் குழப்பங்கள் உண்டாகும் என்றாலும் நான்காமிடத்தின் மீதான குருவின் பார்வை இருட்டிற்குள் இருந்தது போல் இருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். பொறியியல், நிதி மேலாண்மை, வணிகவியல் துறையினருக்கு முன்னேற்றம் உண்டு. அரசுப்பணி, ஆட்சிப்பணிகளுக்குரிய தேர்வில் முழு கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். முயற்சிகளால் வெற்றியை அடைவீர்கள்.

பெண்கள்: உங்கள் வார்த்தைகளில் கனிவு கூடும். ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நலனுக்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அயன சயன  சுகஸ்தானத்தின் மீதான குருவின் பார்வையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும்.  சந்தோஷம் கூடும். நிம்மதியான உறக்கம் தோன்றும். தாயார் வழியில் நன்மைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் சில சங்கடங்களை சந்திக்கலாம். சில நேரங்களில் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுவீர்கள். தீர யோசிக்காமல் செயல்படும் காரியங்களில் எதிர்பார்த்த பலன் இழுபறியாகும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது.

உடல்நிலை:  ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் நோய்களின் வேகம் குறையும். எழுந்து நடக்க முடியாதவர்கள் கூட ஆரோக்கிய நிலையை அடைவர். பாப கிரகங்கள் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் தீராத நோய்கள் தீரும், எதிரிகளால் உண்டாகும் எதிர்ப்பும், மன உளைச்சலும் இல்லாமல் போகும் என்றாலும் உஷ்ண சம்பந்தமான தொந்தரவு, மூட்டுவலி, இனம் தெரியாத நோய்கள் தோன்றும். நட்சத்திர நாதன் கேதுவின் 3ம் இட சஞ்சாரம் உங்களுக்கு சாதகத்தை உண்டாக்கி வேகத்தையும் வீரியத்தையும் வழங்கும். நோய்கள் உண்டானாலும் அவை சிகிச்சைகளால் நலமாகும்.

தொழில்:  உழைப்பு அதிகரிக்கும், தொழில் ஸ்தானத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் உழைப்பிற்கேற்ப வருமானம்  புதிய முதலீடுகள், முயற்சிகள் இப்போது வேண்டாம். அரசியல் ஏற்றம் இறக்கமாகும். நிதி நிறுவன முதலீடுகளில் சங்கடம் தோன்றும்.  மருந்து, பெட்ரோல், ஓட்டல், கெமிக்கல் தொழில்களில் முன்னேற்றம் உண்டாகும். பாக்கிய ஸ்தானத்து ராகு உங்கள் நிலையில் மாற்றம் செய்வார். புதுவகைத் தொழில்களில் உங்களை ஈடுபடுத்துவார். குறுக்கு வழியில் உங்களை அழைத்துச் செல்வார். பணத்திற்கு ஆசைபட்டு சட்டத்திற்கு புறம்பான தொழில்களில் ஈடுபட வேண்டாம். அதனால் உங்கள் கவுரவத்திற்கு குந்தகம் உண்டாகும்.

பரிகாரம்: கண் விழித்ததும் சூரிய பகவானை வணங்கி விட்டு அன்றைய நாளைத் தொடங்குங்கள். சங்கடங்கள் பனிபோல விலகும்.

பூரம்: யோசித்து செயல்படுங்கள்

அதிர்ஷ்டம், அழகிற்கும் காரகமான சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும், செல்வாக்கிற்கு, கவுரவத்திற்கு காரகமான சூரியனை ராசிநாதனாகவும் கொண்டதால் உங்கள் எண்ணங்களை செயலாக்குவதில் வல்லவர்கள் நீங்கள். நினைத்ததை சாதிக்கும் வரையில்  ஓய மாட்டீர்கள். சுக ஸ்தானத்தில் இருந்த கேதுவால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சங்கடப்பட்டு வந்திருப்பீர்கள் என்றாலும் 2022 மார்ச் 21 முதல் கேது உங்களின் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சங்கடங்கள் விலகி இருக்கும். 7ல் சஞ்சரித்த குருவும் உங்களை ஏற்றம் பெற வைத்திருப்பார். இந்த நிலையில் 2022 ஏப்.13 அன்று குரு உங்கள் ராசிக்கு 8ல்  சஞ்சரிக்க உள்ளார். சுபகிரகமான குரு 8ல் மறைந்தாலும்  அவரது பார்வைகளின் வழியே நற்பலன் வழங்குவார்.

நிதி: தனாதிபதியான குரு இக்காலத்தில் உங்கள் தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீங்கள் எதிர்பார்த்த வரவுகள் வரத் தொடங்கும். குடும்பத்திற்கு தேவையானவற்றை நிறைவேற்றி மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். கடனால் சங்கடப்பட்டு வந்த நிலை இனி மாறும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பாக்கிய ஸ்தான ராகுவால் திடீர் வருமானம் ஏற்பட்டு அதை சேமிப்பாக மாற்றுவீர்கள். ஒரு சிலர் ஸ்திர சொத்துகளை வாங்குவீர்கள். வருமானத்தில் தடைகள் உண்டாகும் என்றாலும் உங்களின் முயற்சியினால் அதை சரி செய்துவிட முடியும். இக்காலத்தில் சோர்வு, கவனமின்மை, அலட்சியத்திற்கு இடமளிக்க வேண்டாம். உங்கள் உழைப்பின் அளவை வைத்தே இப்போது உங்களால் வருமானம் பெற முடியும்.

குடும்பம்: பல சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு இக்காலம் நற்காலமாக இருக்கும். உங்கள் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனி நடந்தேறும். குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலர் நிலம் அல்லது மனை என்று வாங்குவதுடன் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகி மகிழ்ச்சியடைவீர்கள். சுக ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். அதனால் சந்தோஷ விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தினர் வழியே ஆதரவு உண்டாகும்.

கல்வி:  உடல்நிலை, மன நிலை, சமீப காலமாக நாட்டில் உண்டான சூழல் என்று பலவற்றால் உங்கள் கல்வி நிலையில் மந்தமான நிலை உருவாகி இருக்கும். பொதுவாகவே உங்கள் நடசத்திராதிபதியான சுக்கிரனுக்கு வித்யா காரகனான புதன் நட்பானவர் என்பதால் கல்வியில் நினைத்ததை சாதிக்க முடியும். 8ல் குரு மறையும் இக்காலத்தில் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று செயல்படுபவர்களால் வெற்றியை எட்ட முடியும். கலை, அறிவியல் மாணவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். குரூப் தேர்வுகளில் முயற்சிகளால் பலன் உண்டாகும்.

பெண்கள்: ஒரு பக்கம் சந்தோஷம் மறு பக்கம் ஏதாகிலும் ஒரு பிரச்னை என்றிருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து வாழ்ந்து வந்தீர்கள். குரு பார்த்திடும் இடங்களால் உங்கள் வாழ்க்கையில் வளமும் நலமும் நிறையப் போகிறது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பிப்பீர்கள். குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.

உடல்நிலை: ஆயுள் காரகன் 6ல் சஞ்சரிப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் இருக்கும். சுக ஸ்தானத்தில் இருந்த கேது 3 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி விட்டதால் ஆரோக்கியம் சீராகும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உடலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும் என்றாலும், தொற்று, மறைமுக நோய்களாலும், உஷ்ண நோய்களால் தொல்லை உண்டாகலாம். தவறான உறவு, ஆசைகளுக்கும் மனதில் இடம் கொடுக்க வேண்டாம்.

தொழில்: முயற்சிக்கு மேல் முயற்சியாக வருமானத்திற்காக பணியாற்றினாலும் தடை உண்டாகி உங்களைத் திண்டாட வைத்திருக்கும். இந்த நிலையில் 8 ல் குரு மறைவதால் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாற வேண்டியதாக இருக்கும். எனவே, அவசரப்பட்டு புதிய முயற்சிகளில் இக்காலத்தில் இறங்க வேண்டாம். பாக்கிய ஸ்தானத்து ராகு தொழிலில் ஆதாயத்தை உண்டாக்குவார். கெமிக்கல், பெட்ரோல், எலெக்ட்ரானிக்ஸ், சினிமா, தொலைக்காட்சி, பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் சிறப்பான பலனடைவர்.  சாதாரண தொழிலிலும் எதிர்பாராத லாபம் அதிகரிக்கும். . அரசுப் பணியாளர்களுக்கு வழக்கமான பணியில் சிக்கல்கள் உண்டாகாது. இக்காலத்தில் எல்லாவற்றிலும் ஒரு முறைக்கு நுாறு முறை யோசித்து முடிவெடுங்கள்.

பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை மனதில் எண்ணி செயல்படுங்கள் நன்மைகளைக் காண்பீர்கள்.

உத்திரம் 1 ஆம் பாதம்: நிதானம் தேவை

செல்வாக்கு, ஆற்றலுக்கு காரகனான சூரியனை ராசி நாதனாகவும், நட்சத்திர அதிபதியாகவும் கொண்டவர் நீங்கள் என்பதால் சூரியன் போல ஒளி மிக்கவராக இருப்பீர்கள். எத்தகைய பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி படைத்தவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான குரு 2022 ஏப்.13 ஏப்ரல் முதல் அஷ்டம ஸ்தானத்திலேயே சஞ்சரிக்க இருக்கிறார். ஏழில் சஞ்சரித்த நிலையில் 8 ஆம் இடத்திற்கு செல்லும் குரு உங்களுக்கு  சங்கடங்களை ஏற்படுத்துவார். சிந்திக்காமல் சில காரியங்களை செய்ய வைத்து அதன் வழியே உங்களுக்கு பிரச்னைகளை வழங்குவார். மற்ற கிரகங்களின் நிலைகள், பார்வைகள், தசா புத்திகளால் இவற்றிலிருந்து உங்களுக்கு மாற்றமும் உண்டாகும்.

நிதி: முழுமையான சூரிய ஆதிக்கம் கொண்ட உங்களுக்கு அரசு வகையிலான உதவி, வருவாய் என்பது எப்போதும் உண்டு. உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எதிர்பாராதவற்றிலும் உங்களுக்கு லாபத்தை உண்டாக்குவார். தனக்காரகன் 8 ல் மறைவதால் புதிய முதலீடுகள், கவர்ச்சிகரமான திட்டங்களில் டெபாசிட் செய்வது போன்றவை வேண்டாம். வழக்கமான வருமானத்தில் தடை உண்டாகாது என்பதால் வருவதையும், இருப்பதையும் வைத்து வாழ பழகுங்கள். எந்த சூழலிலும் உங்கள் நிலை தாழ்வடையாது என்பதுடன் 3ல் சஞ்சரிக்கும் கேதுவால் இறை அருளுடன் மனவலிமையும் பெறுவீர்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை செய்யக் கூடிய வகையில் நிதி நிலைமை இருக்கும்.

குடும்பம்: உங்களின் சுக ஸ்தானத்திற்கும், குடும்ப ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். கணவன், மனைவி உறவில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் 3 ல் சஞ்சரிக்கும் கேது நன்மை வழங்குவார். குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பூமி, நிலம் வகையில் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்த முயற்சிகள் நிறைவேறி குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். தாய்வழி உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கல்வி: மனதில் இருந்த பிரச்னைகள் விலகும் என்பதால் கல்வியில் கூடுதல் கவனம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அக்கறையுடன் படித்தால் அரசுத்தேர்வில் மதிப்பெண்கள் கூடும். மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 2022 ஆக.8 ல்  வக்ரகதியை அடைகிறார் என்பதால் அதுவரை படிப்பில் அதிக கவனம் தேவைப்படும். பொறியியல், விவசாயம், ஆர்க்கிடெக்சர், மருத்துவ மாணவர்களின் முயற்சிகள் வெற்றி பெறும். ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றினால் வெற்றி உண்டாகும்.

 பெண்கள்: ஏழாமிடத்து குருவால் ஏற்றம் பெற்ற நீங்கள் இப்போது குடும்ப, சுகஸ்தானங்களைப் பார்க்கும் குருவால் மேலும் முன்னேற்றம் காணப் போகிறீர்கள். குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக பல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி செயல்படுவீர்கள். சில நேரங்களில் சிலவற்றை யோசிக்காமல் செய்து சங்கடத்திற்கு ஆளாகலாம். இருந்தாலும் குடும்பத்தினரின் ஆதரவு உங்களை முழுமையாக பாதுகாக்கும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். நிம்மதி, சந்தோஷம் என்று உங்கள் மனம் மகிழும்.

உடல்நிலை: கொரோனா காலத்தில் கூட அதிகமாக பாதிக்கப்படாதவர்கள் நீங்களாகத்தான் இருந்திருப்பீர்கள். அதற்கு காரணம் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்  ஆயுள் காரகன் சனிதான். இந்த நிலையிலும் சின்னச்சின்ன பாதிப்புகள் உங்களுக்கு உண்டாகி இருக்கும். உங்கள் தாயாரின் உடல்நிலைக்கு சங்கடம் உண்டாகி இருக்கும் அதற்கு காரணம் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்த கேது. இந்த நேரத்தில் கேது 3 ல் சஞ்சரிப்பதால் உங்களிடம் வேகம் கூடும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். சுக ஸ்தானத்தை குரு பார்க்க ஆரம்பித்து விட்டதால் உடலில் இருந்த தொல்லைகள் அகன்று சந்தோஷத்தை நோக்கி நடைபோடுவீர்கள். உஷ்ண நோய்கள் தோன்றி மறையும்.

தொழில்: தொழில் ஏற்றம் இறக்கமாகும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனத்துடன் செயல்பட வேண்டும். சிறு தொழில் செய்து வருபவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை அடைவர்.  பெரும் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் உருவாகும். முதலீடுகளில் தேக்கம் உண்டாகும். உடனடி ஆதாயத்திற்கு இக்காலத்தில் இடமில்லை. விவசாயிகளுக்கு  விளைபொருட்கள் எதிர்பார்த்த விலை போகாது. தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் உடன் வேலை செய்பவர்களுடனும் முதலாளியிடத்திலும் பணிந்து போக வேண்டியதாக இருக்கும். யோசிக்காமல் புதிய முதலீடுகள், புதிய தொழில் எண்ணங்கள் வேண்டாம். ஷேர் மார்க்கெட் இக்காலத்தில் பயன் தராமல் போகும்.

பரிகாரம்: சூரியனார் கோவிலின் மூலவரான சூரியநாராயணரை மனதில் நினைத்து செயல்பட தடைகள் விலகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (22.4.2023 முதல் 1.5.2024 வரை) »
temple news
அசுவினி: குடும்பத்தில் சுபச்செலவுகுருபகவான் ஏப்.22,2023 இரவு 11:27 மணிக்கு உங்கள் நட்சத்திரத்தின் முதல் ... மேலும்
 
temple news
கார்த்திகை: போட்டியில் வெற்றிகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி ஆறாவது ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உறவினர்களால் நன்மைகுருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி நான்காவது ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் இருபத்தி இரண்டாவது நக்ஷத்ரத்தின் முதல் ... மேலும்
 
temple news
மகம்: ஒன்பதில் குருபகவான்குரு பகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு 11:27 மணிக்கு உங்களின் பத்தொன்பதாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar