சனிஸ்வர பகவான் கோவில் கால்நடைகள் திரிவதால் பக்தர்கள் ஒட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2022 03:04
காரைக்கால்: திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலில் கூட்டத்தில் கால்நடை சென்றதால் பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஒட்டம் கால்நடைகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார்.பகவானை தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் தினம் பக்தர்கள் வருகின்றனர்.தற்போது கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டு வருகிறது. ஆனால் பக்தர்கள் தரிசனம் செய்யும் கூட்டத்தில் கால்நடைகள் திரிவதால் பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஒட்டம் பிடித்துவருகின்றனர். இதனால் கால்நடை திரிவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதுக்குறித்து திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளுவதில்லை பின்னர் கோவில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் கால்நடைகள் விரட்டும் சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுப்போல் முக்கிய கோவிலில் பக்தர்கள் பலர் வரும் நிலையில் கால்நடைகளை திரியவிடும் உரிமையாளர்கள் மீது கொம்யூன் பஞ்சாயத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நடமாடும் இடங்களில் சாலையில் திரியும் கால்நடைகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.