பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
03:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை சித்ராபவுர்ணமி தேர் திருவிழா இம்மாதம், 16ம் தேதி நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா விமரிசையாக நடக்கும். கடந்த, 2 ஆண்டுகளாக, கோவிட் தொற்று காரணமாக, விழா விமர்சையாக நடக்கவில்லை. இந்த ஆண்டு வழக்கம்போல நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாதம், 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, 11ம் தேதி அன்னவாகனம், 12ம் தேதி அனுமந்த வாகனம், 13ம் தேதி கருடவாகனம் நடக்கிறது. 14ம் தேதி செங்கோதை அம்மன் அழைப்பும், 15ம் தேதி திருக்கல்யாண உற்சவம் புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி சனிக்கிழமை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 17ம் தேதி பரிவேட்டையும், 18ம் தேதி சேஷ வாகன தெப்போற்சவமும் நடக்கிறது. 19ம் தேதி தீர்த்தவாரி, 23ம் தேதி சனிக்கிழமை மறுபூஜை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலமலை ரங்கநாதர் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெகதீசன் செய்து வருகிறார்.