மேலூர்: சருகுவலையபட்டி வீரகாளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் இன்று நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் மந்தையில் இருந்து கோயிலுக்கு பால்குடம் கொண்டு சென்றனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (ஏப் 5) சிலை எடுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.