திருத்தங்கல் கருநெல்லி நாதர் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2022 04:04
சிவகாசி: திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத , கருநெல்லிநாத சுவாமி, பழனியாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் மங்கள இசையுடன், சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கொடியேற்றம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், சிறப்பு வாகனத்தில் வீதி உலா வருவார். ஏப். 15 ல் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.