விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2022 11:04
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். பக்தர்கள் விரதமிருந்த அக்னி சட்டி, அலகு குத்தி, பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நிகழ்ச்சி நேற்று மாலை வெகு விமர்சியாக நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து கோயிலை அடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.