வேப்பூர் சஞ்சீவிராய பெருமாள் சுவாமி உற்சவ வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2022 11:04
வேப்பூர்: வேப்பூர் அருகே சஞ்சீவிராய பெருமாள் சுவாமி உற்சவ வீதியுலா நடந்தது.
வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, 48 ஆண்டுகளுக்கு பின் வரும் 10ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அதை தொடர்ந்து, கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா துவங்கியது. பின்னர், தினசரி சுவாமிக்கு பல திரவியங்களால் அபிஷேக ஆராதனைகளும் தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பல்வேறு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஶ்ரீ சஞ்சீவிராய பெருமாள் சுவாமி உற்சவ வீதியுலா நடந்தது. இதில், சுற்றுப்புற கிராம பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.