மயிலாடுதுறை : சீர்காழி அருகே சந்தன முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா புளிச்சகாடு நித்திய வனத்தில் புகழ்பெற்ற சந்தன முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி பூர்வாங்க பூஜையும் முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கின தொடர்ந்து இன்று காலை 9 45 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது அதனையடுத்து 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் கும்பாபிஷேகத்தை முத்துக்குமார் சிவாச்சாரியார் தலைமையில் ஆனால் செய்து வைத்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை கிராம வாசிகள் செய்துள்ளனர்.