திருப்புத்தூர்: திருப்புத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, கரகம் எடுத்து அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
திருப்புத்தூர் நாகராஜன் நகர் முத்தெடுத்த முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இப்பகுதியினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இரவில் அம்மனுக்கு கும்மி அடித்து பாடி பிரார்த்தனை நடந்தது. நேற்று காலை பழைய பஸ்ஸ்டாண்ட் விநாயகர் கோவிலில் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி, கரகம் எடுத்து, அலகு குத்தி ஊர்வலமாக புறப்பட்டனர். முத்துமாரியம்மன் கோவில் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்தனர்.