மேலூர்: மேலுார் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் செவ்வாய் பொங்கல் வைத்தும் மாவிளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இத் திருவிழாவில் மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.